/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சுவாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்திக்கதோம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சுவாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்திக்கதோம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சுவாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்திக்கதோம் என்று பாடி ஆடியபடியே செல்கிறார்கள் இல்லையா? திந்திக்கதோம் என்றால் என்ன பொருள்? இது குழந்தை வார்த்தை. குழந்தைகள் ஏதேதோ பேசும். அந்த மழலைச் சொல் கேட்க இனிமையாக இருக்கும். ஆனால் பொருள் தெரியாது. இருப்பினும் அதை ரசிப்போம். அதுபோல் இது ஐயப்ப பக்தர்களின் தாள வார்த்தை. மகிஷியை சாஸ்தா அழித்ததும் அவளது உடல் மீது ஏறி நின்று நடனமாடினார். அப்போது சுற்றி நின்ற தேவர்களெல்லாம் திந்திக்கதோம் திந்திக்கதோம் என்ற பொருள் தெரியாத வார்த்தையைச் சொல்லியபடியே மகிழ்ச்சியில் நடனமாடினர்.
டிச 05, 2024