உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஒரு நாளைக்கு பத்து யானை பத்து எருமை உணவு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

ஒரு நாளைக்கு பத்து யானை பத்து எருமை உணவு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பகாசுரன் என்பவனுக்கு காட்டுவாசிகள் ஒரு வண்டியில் உணவு ஏற்றி அனுப்புவார்கள். உணவு கொண்டு செல்பவனையும் அவன் தின்று விடுவான். இவனை பீமன் கொன்று மக்களைக் காத்தான் என்பது மகாபாரத வரலாறு. இந்த பகாசுரனின் தம்பியின் பெயர் கிர்மீரன். இவன் மலையாகவும் மாறுவான், மடுவாகவும் மாறுவான். மடுவாக, அதாவது குளமாக மாறும் சமயத்தில், அதில் தண்ணீர் குடிக்க வரும் பத்து யானைகளையும். பத்து எருமைகளையும் விழுங்கி விடுவான். தண்ணீராக இருந்தாலும், அவனுக்கும் தாகம் எடுக்குமாம். அப்போது ஒரு கிணற்று தண்ணீரை குடித்து விடுவான். இவன் முனிவர்கள் செய்யும் தவத்தைக் கலைத்து வந்தான். அவர்களையும் அடக்கியாள முயன்றான். இதையறிந்த பீமன், அவனையும் கொன்றான். இதன் பின் தான் மக்கள் முழு நிம்மதியடைந்தனர். முனிவர்களும் எந்த வித சிரமமும் இல்லாமல் தவம், யாகம் முதலானவற்றைத் தொடர்ந்தனர். பத்து யானை, பத்து எருமை...அடேங்கப்பா எவ்வளவு பெரிய வயிறு அவனுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது இல்லையா!

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !