உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஸ்ரீரங்கத்தின் பெருமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

ஸ்ரீரங்கத்தின் பெருமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

ஸ்ரீரங்கத்தின் பெருமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar ஸ்ரீரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரம பதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது. பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் பெரியது என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு. இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும், பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவ மூர்த்தியான நம்பெருமாளை, ரங்கராஜர் என்றும், அழகிய மணவாளன் என்றும் போற்றுவர். ஸ்ரீரங்கம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாக கருதப்படுகிறது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ரிஷப ராசியினரும் இங்கு வழிபட்டால் ஜாதக ரீதியான தோஷங்கள் விலகும். வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தை சுட்டிக் காட்ட, தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள்பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர். இங்குள்ள ரங்க விமானம் ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கி.மீ. தூரத்துக்குள் எங்கே இருந்தாலும், முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ஓம் என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த தங்க விமானத்தில் உள்ள பரவாசு தேவர், கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ