நிலத்துக்கு அதிபதியான செவ்வாய் | ஆன்மிகம் | Aanmeegam
நிலத்துக்கு அதிபதியான செவ்வாய் ஒருவரின் வாழ்வில் செவ்வாயின் நிலையைப் பொறுத்தே, நிலம், மனைகள் வாங்கும் யோகம் அமையும் என்பர். பரத்வாஜ முனிவருக்கும், ஒரு தேவகன்னிக்கும் பிறந்தவரே செவ்வாய். பெற்றோர் அவரை, பெற்ற இடத்திலேயே விட்டுச் சென்று விட்டனர். குழந்தையின் அழுகுரல் கேட்ட பூமித்தாய், நடந்த விபரத்தை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தாள். அவளே குழந்தையை வளர்த்தாள். குழந்தை வளர்ந்து சிறுவன் ஆனதும் தன் தந்தை பற்றி கேட்டான். அவனிடம் உண்மையை உரைத்த பூமித்தாய் பரத்வாஜரைக் கண்டுபிடித்து, அவரிடமே ஒப்படைத்தாள். தான் வளர்த்த பிள்ளை என்பதால் “மகனே! நான் பூமி. இனி இந்த பூமியைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இதை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொறுப்பையும் நீயே ஏற்பாய்,” என அருளினாள். இதனால் தான் செவ்வாயை ஜோதிடர்கள், பூமிகாரகன் என்பர். வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாயின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, அவர் தைரியத்தையும் தருபவர். ராணுவ வீரர்கள் பலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருக்கும். இதனால் தான் அவர்கள் எதிரிகளை துவம்சம் செய்கின்றனர்.