உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சனிதோஷம் நீங்க பவுர்ணமி விரதம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சனிதோஷம் நீங்க பவுர்ணமி விரதம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

ஏழரைச்சனி அஷ்டமச்சனி கண்டச்சனி என பல சனி தோஷங்கள் மனிதனை மாறி மாறி பாடாய் படுத்தும். இவரது பிடியிலிருந்து சற்றாவது விடுபட்டு ஆறுதல் பெற வேண்டுமென்றால் அம்மன் வழிபாடு முக்கியம். உங்கள் ஊரில் எந்த அம்மன் கோவில் இருந்தாலும் சரி. பவுர்ணமியன்று சென்று வழிபட்டு விடுங்கள். இன்று பவுர்ணமி நன்னாள். இன்று போல ஒவ்வொரு பவுர்ணமியன்றும் உங்களால் முடிந்தளவு விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் அந்தத்தாய் நம் மீது அன்பு கொண்டு சனியின் கொடூரத்தை தடுத்து நிறுத்துவாள். இந்நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவது ஆகிய தர்ம காரியங்களைச் செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும் பணத்தட்டுப்பாடு நீங்கவும் குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். போதாக்குறைக்கு துன்பங்களை எதிர்கொள்ளும் மனோபலத்தையும் சந்திரன் அருள்வார். இந்நாளில் துர்க்கை வழிபாடு மிகமிக சிறந்தது.

பிப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ