மாசி மாத சிறப்பு | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
மாசி மாத சிறப்பு இன்று மாசி மாதப் பிறப்பு. இந்த மாதத்தில் பெருமாளை வணங்குவது மரபு. தினமும் பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் செல்வவளம் பெருகும். மாசி மாத பவுர்ணமியை அடுத்த நான்காம் நாளான சங்கடஹர சதுர்த்தியன்று பெண்கள் தங்கள் தாலிச்சரடை மாற்றிக் கொள்வர். மாசிக்கயிறு பாசி படியும் என்பர். அதாவது இந்தக் கயிறு பாசி படியும் அளவுக்கு நிலைத்து நிற்கும். சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். சிவனுக்குரிய மகாசிவராத்திரி இந்த மாதத்தில் தான் வருகிறது. அன்றிரவு நான்கு ஜாம பூஜை சிவாலயங்களில் நடக்கும். ஒவ்வொரு பூஜையின் போதும் மூலவருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இரவு முழுக்க கண்விழித்து உணவைத் தவிர்த்து மறுநாள் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் இவ்வுலகில் செல்வவளமும் அவ்வுலகில் பிறப்பில்லா பேரின்பமும் அடையலாம்.