நெல்லிக்காய்க்கும் காசிக்கும் சம்பந்தம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நெல்லிக்காய்க்கும் காசிக்கும் சம்பந்தமா...இதென்ன சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கிறதே என்று தானே திகைக்கிறீர்கள். ஒரு முக்கியமான ஆன்மிக சம்பந்தம் இந்தக் காய்க்கும், காசி என்ற ஊருக்கும் இருக்கிறது. பெருமாளுக்கு மிக பிடித்தமான நைவேத்யம் நெல்லிக்கனி. நெல்லி மர இலைகளால், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால், அவர் மிகவும் மகிழ்வார். வீட்டு வாசலில் நெல்லி மரம் இருந்தால், அந்த வீட்டை, மகாலட்சுமி தேடி வருவாளாம். அது மட்டுமல்ல, நெல்லி மரம் இருக்கும் வீட்டை கெட்ட சக்திகள் அணுகாது. பில்லி, சூன்யம் என்றெல்லாம் சொல்வார்களே! அது நெல்லி மரம் அருகில் நெருங்கக்கூட செய்யாதாம். ஏகாதசி அன்று நெல்லிக்காய் அல்லது கனியைப் பறித்து தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் துவாதசியன்று அதை சாப்பிட்டால், காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்குமாம். சிறிதளவு நெல்லி இலையைப் பறித்து, காலையில் சூர்யோதத்தின் போது, சூரியனை நோக்கி துõவினால், வீட்டிற்கு நல்ல செய்தி வரும் என்பதும் நம்பிக்கை.