உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நீறிட்டான் மதில் எங்கிருக்கிறது தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நீறிட்டான் மதில் எங்கிருக்கிறது தெரியுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நீறிட்டான் மதில் எங்கிருக்கிறது தெரியுமா? மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துயர் வாய்உமை பங்கன் திருவாலவாயான் திருநீறே என்று திருநீற்றின் மகிமையைப் பாடியுள்ளார் ஞான சம்பந்தப் பெருமான். திருநீறு அணிந்தால் வானவருக்கும் மேலான பதவியை அடையலாம். திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் அக்காலத்தில் மதில் சுவர்கள் கட்டப்பட்டன .சிவனே சித்தர் வடிவில் வந்து, இந்த மதில்கள் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டதாக சொல்வர். நான்காவது மதிலைக் கட்டும் போது, ஊழியர்களுக்கு திருநீறே கூலியாகக் கொடுக்கப்பட்டது. அதை வீட்டில் சென்று பிரித்துப் பார்த்தால், அவரவர் உழைப்புக்கேற்ப தங்கமாக மாறியிருந்தது கண்டு அதிசயித்தனர். இந்த மதிலுக்கு நீறிட்டான் மதில் என பெயரும் சூட்டப்பட்டது. இப்போதும் இதன் பெயர் இதுதான்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !