எதற்கும் கொடுப்பினை வேண்டும்
இன்று மாசி மகம். இந்நாள் கும்பகோணத்தில் ரொம்ப விசேஷம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த நாள் மகாமகமாகக் கொண்டாடப்படும். இதைப் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதாவது கொடுத்து வைத்திருக்க வேண்டும். 1873ல் மகாமகம் வந்தது. தமிழ்த்தாத்தா என போற்றப்படும் உ.வே. சாமிநாதைய்யர், திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்தார். அவருக்கு மகாமகத்தை பார்க்க ஆசை. ஆதீனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கூட, அவரால் அன்றைய ஆண்டு மகாமகத்துக்கு செல்ல இயலவில்லை. அடுத்து 1885ல் தான் அவருக்கு கும்பகோணத்து தெய்வங்களெல்லாம் அருள்புரிந்தன. ஆதீனத்தின் 16வது சன்னிதானமாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் மகாமகத்துக்கு புறப்பட்டார். அவருடன் ஆதீனத்திலேயே தங்கியிருந்து தமிழ்ப்பணி செய்து வந்த சாமிநாதைய்யரும் சென்றார். மகாமக குளத்தில் நீராடி, தன் ஆவலை பூர்த்தி செய்தார் அய்யர். அது மட்டுமா! மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த அவர், ஆதீனத்திடம் நுõறு ரூபாயைக் கொடுத்து, மாகேஸ்வர பூஜை என்னும் அன்னதானத்துக்கு வைத்துக் கொள்ளும்படி நன்கொடை அளித்தார். வரும் 2028ம் ஆண்டில், அடுத்த மகாமகம் வருகிறது. அதற்கு நமக்கெல்லாம் கொடுப்பினையை கும்பேஸ்வரர் அளிக்க வேண்டும் என மாசிமகமான இன்று பிரார்த்திப்போம்.