ஏழு வெள்ளி விரதம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஏழு வெள்ளி விரதம் வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் மற்றும் முருகப்பெருமான் கோவில்களுக்கு பலரும் செல்வர். இந்நாளில் விரதமும் இருப்பர். இவர்களுடன் விநாயகரையும் வெள்ளிக்கிழமை நாளில் இணைத்துக் கொள்ளலாம். ஏழு வெள்ளிக்கிழமைகளில் தொடர்ச்சியாக விநாயகரை நினைத்து விரதமிருப்பது செல்வச் செழிப்பையும் திருமணத்தடையையும் நீக்கும். ஆண்கள் ஏழு வெள்ளிகள் தொடர்ச்சியாகவும் பெண்களுக்கு மாதவிடாய் தவிர்த்த மற்ற வெள்ளிகளில் தொடர்ச்சியாகவும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை துவக்க வேண்டும். தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
மார் 20, 2025