/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! Alagar Kovil | Kallazhagar
பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்! Alagar Kovil | Kallazhagar
மதுரை அருகே அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடி திருவிழா ஆகஸ்ட் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கள்ளழகர் நாள்தோறும் அன்னம், சிம்மம், ஹனுமான், யானை, குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் களைகட்டியது. காலை அலங்கரிக்கப்பட்ட தேரில், சுந்தர்ராஜ பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
ஆக 09, 2025