உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கோபுர தரிசனம் செய்து அம்மனை வழிபட்ட பக்தர்கள் | Amman Temple kumbabishekam | Ranipet

கோபுர தரிசனம் செய்து அம்மனை வழிபட்ட பக்தர்கள் | Amman Temple kumbabishekam | Ranipet

இலந்தியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்! ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே மேல்நெல்லி கிராமத்தில், இலந்தியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த கலசங்களுக்கு யாக சாகசாலையில் 2 நாட்களாக பூஜைகள் நடத்தப்பட்டன. பூர்ணாஹுதி முடிந்து, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கசலங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பரிவார மூர்த்திகளான விநாயகர், பாலமுருகர், அபிராமி, வைஷ்ணவி, மாதேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, துர்காதேவி ஆகிய சன்னதிகளின் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேல்நெல்லி கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டர கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோபுர தரிசனம் கண்டு, அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி