உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / மகா கும்பாபிஷேகம் கண்ட வண்டியூர் வீரராகவ பெருமாள்

மகா கும்பாபிஷேகம் கண்ட வண்டியூர் வீரராகவ பெருமாள்

மகா கும்பாபிஷேகம் கண்ட வண்டியூர் வீரராகவ பெருமாள் மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோவில் மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம் மங்கல இசை நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட நான்கு கால யாகசாலை பூஜைவேத மந்திரங்கள் முழங்க துவங்கியது. அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார், அழகர் கோவில் அர்ச்சகர்கள் சுந்தர நாராயண பட்டாச்சாரி மற்றும் சுந்தரராஜன் ஐயங்கார்ஆகியோர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகமானது இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை