உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஆருத்ரா தரிசனம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு | Aruthra dhraisanam | Arudra Darisanam

ஆருத்ரா தரிசனம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு | Aruthra dhraisanam | Arudra Darisanam

திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், சிவபெருமான் திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாதம் கொண்டாடப்படும் திருவாதிரை பெருந்திருவிழா எனப்படும் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடராஜா் சன்னதியில் ஹோமங்கள் வளா்த்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. 10ம் நாளான இன்று அதிகாலை ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடந்தது. சிவபெருமானின் திருநடனக்காட்சியை காண, நெல்லையப்பா், அன்னை காந்திமதி அம்பாள், 63 நாயன்மாா்கள், பாண்டிய மன்னன் ஆகியோா் தாமிர சபை முன் எழுந்தருளினா்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை