உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / மதுரையை கமகமக்க வைத்த பிரியாணி திருவிழா | Biriyani Festival | Madurai mundiyandi temple

மதுரையை கமகமக்க வைத்த பிரியாணி திருவிழா | Biriyani Festival | Madurai mundiyandi temple

150 ஆடுகள்,300க்கும் மேற்பட்ட கோழிகள், 2500 கிலோ அரிசியில் கமகமவென மனக்க மனக்க ரெடியாகிறது பிரியாணி. மதுரை, திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டி முனியாண்டி கோயிலில் நடந்த பிரியாணி திருவிழா கொண்டாட்டம் தான் இது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை இங்கு பிரியாணி திருவிழா வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். ஒரு வாரம் காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை