/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சித்திரை திருவிழா கோலாகல நிறைவு | chithirai utsav | Mariamman Temple | Car festival | Samayapuram
சித்திரை திருவிழா கோலாகல நிறைவு | chithirai utsav | Mariamman Temple | Car festival | Samayapuram
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 15ம் தேதி முடிவடைந்தது. விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, அம்மன் வசந்த மண்டபத்தில் பிரவேசித்தார். 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க கமல வாகனத்தில் உற்சவர் மாரியம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏப் 23, 2025