உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஆன்மிக சுழலுக்குள் என்னை இழுத்து சென்றவர் கவிஞர் வாலி | கண்டேன் கடவுளை | DinamalarAnmeegam

ஆன்மிக சுழலுக்குள் என்னை இழுத்து சென்றவர் கவிஞர் வாலி | கண்டேன் கடவுளை | DinamalarAnmeegam

#dinamalaranmeegam #kandaynkadavulai13 #MaiPaNarayanan #MaiPaNarayananLatest #Vaali #KavignarVaali #speaker #Kalaignar101thBirthday #ThirumangaiAzhwar அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதற்கேற்ப, தாய் தந்தையின் முதல் எழுத்தையே இனிஷியலாக, பலரும் உச்சரிக்கும் பெயராகக் கொண்டவர் மை. பா. எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பேச்சாளர், நடிகர் என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்து வரும் மை பா. நாராயணன், உச்சகட்டமாக அகத்தே உள்ள ஆன்மாவை கண்டு உணரும் ஆன்மீகம் என்ற அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரத்தை பருகிக் கொண்டிருப்பவர். எப்போதும் தேடல் இருந்துட்டே இருந்தால்தான் விரும்பிய துறையில் வெற்றியை அடையமுடியும்... என்கிறார். திருமங்கையாழ்வார்தான் என் ரியல் ஹீரோ. வீட்டுக்குள் நுழைந்ததும் ஆழ்வார் என்ற சட்டையை எடுத்து போட்டால்தான் எனக்கு ஆத்ம திருப்தி என்று ஆழ்வார்களை பற்றி பேசும்போதே... மடைதிறந்த வெள்ளமென வார்த்தைகள் தேனாய் வந்து விழுகிறது. கண்டேன் கடவுளை என்ற நம் தொடரில் தன் அனுபவங்களை சொல்லி மகிழ்கிறார் மை பா. நாராயணன்

ஜூலை 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை