உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அன்னை ஈஸ்வரம்மா தின விழா எளியோருக்கு வஸ்திரதானம்

அன்னை ஈஸ்வரம்மா தின விழா எளியோருக்கு வஸ்திரதானம்

கொடைக்கானல் ஏரிப்பகுதியில் அமைந்துள்ள சாய் சுருதி வளாகத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபா தாயார் ஈஸ்வரம்மா தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6 மணியளவில் ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தன் நிழச்சியுடன் விழா துவங்கியது. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு வேத பாராயணம் மற்றும் சாய்பஜன் நடந்தது. காலை 8-15 மணிக்கு மஹா நாராயண சேவா மற்றும் வஸ்திரதானம் நடைபெற்றது. எளியோர் 6000 பேருக்கு வஸ்திரதானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல், ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு சாய் சுருதிலயா சமர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. காலை 11.30 மணிக்கு மஹா மங்கல ஆர்த்தி மற்றும் சாய் சுருதி கீத சுதா பக்தி இசை, மதியம் 1 மணிக்கு மஹா மங்கள ஆரத்தியுடன் அன்னை ஈஸ்வரம்மா தின விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.

மே 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !