உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / 7-வயது பாலகனுக்கு பக்கவாத்தியம் வாசித்த ஜாம்பவான்கள்!

7-வயது பாலகனுக்கு பக்கவாத்தியம் வாசித்த ஜாம்பவான்கள்!

1948-ல் பிறந்தவர் மதுரை T.N.சேஷகோபாலன் அவர்கள், கர்நாடக இசை உலகின் சிகரமாக திகழும் ஒரு பன்முகக் கலைஞர். இவர் இசைமேதை ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் பிரதம சீடரான ராமநாதபுரம் C.S.சங்கரசிவம் அவர்களின் சீடர். 7 வயதிலேயே தனது தாயாரின் இசையால் ஈர்க்கப்பட்டு மேடையேறிய இவர், வளமான குரல் வளமும், அபார கற்பனை திறனும் கொண்டவர். பாட்டு மட்டுமல்லாமல் வீணை, ஹார்மோனியம் மற்றும் தான் உருவாக்கிய ஸ்வர ராக பிரதர்ஷினி (Keyboard) ஆகியவற்றிலும் வல்லுநர். சிறந்த ஹரிகதா கலாட்சேப நிபுணர், நாமசங்கீர்த்தன பாகவதர், மற்றும் பல கீர்த்தனைகள், தில்லானாக்களை இயற்றிய இசையமைப்பாளர். இந்திய அரசின் பத்ம பூஷண், சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி மற்றும் மத்திய சங்கீத நாடக அகாடமி விருது உட்பட நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றவர். 2001-ல் 12 மணி நேரம் தொடர்ந்து விஷ்ணு கானாஞ்சலி பாடிய சாதனைக்கு சொந்தக்காரர். கண்டேன் கடவுளை என்ற நம் அற்புத நிகழ்ச்சிக்கு தன் இசை, ஆன்மிக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

செப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ