உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Ellai Muneeshwarar Temple | Maha Kumbabhishekam | Manavur

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Ellai Muneeshwarar Temple | Maha Kumbabhishekam | Manavur

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / Ellai Muneeshwarar Temple / Maha Kumbabhishekam / Manavur / Thiruvallur திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் வளாகத்தில் மணவூர் எல்லை முனீஸ்வரர் கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. கேட்கும் வரம் தரும் முனீஸ்வரர் சுவாமியை மணவூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் கடந்த 8 ம் தேதி துவங்கியது. நான்காம் கால யாக பூஜை நேற்று நிறைவடைந்தது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடாகி கோயிலை சுற்றி வளம் வந்தது. பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீரூற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை வெகு விமர்சையாக நடத்தி வைத்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் மணவூர் உட்பட சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முனீஸ்வரர் சுவாமி பக்தர்கள் செய்திருந்தனர்.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை