காயத்ரி ஜபம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
காயத்ரி ஜபம் ஓம் பூர் புவர்ஸுவ எனத்துவங்கும் காயத்ரி மந்திரத்தை அறியாதவர்கள் குறைவு. ஆவணி அவிட்டத்துக்கு மறுநாள், பிராமணர்கள் காயத்ரி ஜபம் செய்வர். இதை மற்றவர்கள் கேட்டு பலன் பெறுவர். காயத்ரி மந்திரத்தை எல்லாருமே சொல்லலாம் என்பவர்களும் உண்டு. ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ ப்ரசோதயாத் என்ற எளிய மந்திரம் இது. வால்மீகி ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஆயிரம் ஸ்லோகங்களுக்கு ஒரு எழுத்தைத் தேர்ந்தெடுத்து, 24 எழுத்துக்களில் இந்த மந்திரம் வடிவமைக்கப்பட்டதாக ஒரு கருத்து உண்டு. இந்த மந்திரத்தை அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்திரர். சமஸ்கிருத்தில் இதை உச்சரிக்க முடியாதவர்கள், “யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் துõண்டுகிறாரோ, அந்த ஒளிக்கடவுளை நான் வணங்குகிறேன்” என்று சொன்னால் போதும். காயத்ரியின் அர்த்தம் இதுதான். இந்தப் பொருளைச் சொல்வதன் மூலம், மனோபலம் அதிகரிக்கும். வளமான வாழ்வு அமையும்.