உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / உணவை எப்படி, எந்த திசை பார்த்து சாப்பிடனும்? | Epi05 | Anmeegamum Arogyamum | Dinamalar Anmeegam

உணவை எப்படி, எந்த திசை பார்த்து சாப்பிடனும்? | Epi05 | Anmeegamum Arogyamum | Dinamalar Anmeegam

ஆன்மிகமும் ஆரோக்கியமும் இரண்டு கண்கள்.எந்த ஒரு செயலை செய்வதற்கு முன். இறைவனை வணங்கிவிட்டு செய்தால் அந்த செயல் செவ்வனே முடியும் என்பது நம்பிக்கை. தொடர் காய்ச்சல், சளி, இருமல் என்று மருத்துவமனையை அணுகும்போது, அது பெரிய நோயாக தெரிய வந்தாலும், உடனே மருத்துவர்தான் நமக்கு கடவுளாக தெரிவார். அவர் நம்மை எப்படியாவது காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றும். அந்த மருத்துவரேகூட, இறைவனை வழிபட்டப் பிறகே, சிகிச்சையை தொடங்குவார். நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு இருந்தாலே எந்த நோயிலிருந்தும் எளிதில் மீண்டுவிடமுடியும். அப்படி, இறையான்மையோடு இரண்டற கலந்த வைத்திய முறைதான் ஆயுர்வேதம். நோய்களை வேறோடு அறுக்கும் வல்லமை ஆயுர்வேத மருத்துவத்துக்கு உண்டு. Spritual Healing என்று சொல்லப்படுகின்ற இந்த மருத்துவமுறையை பின்பற்றுபவர்கள் நிச்சயம் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்பதை விவரிக்கிறார் வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் கெளதமன். ஆன்மிகமும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தினமலர் ஆன்மிகம் youtube சேனலில் தவறாமல் பாருங்கள். நோயில்லாத வாழ்வை பெற்று நூறாண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !