என் 4 வயதில் கண்ணார கண்டேன் கற்பகாம்பாளை! | கண்டேன் கடவுளை | DinamalarAnmeegam
நேர் கொண்ட கண்கள். நிலை நின்ற சித்தம். சத்குருவில் கரைந்த தோற்றம். பார் வெல்லும் கவிதைகள்… பராசக்தி என்ற ஒற்றைச் சொல் கேட்டதும் வீறுகொண்டு எழும் ஆவேசம். மண்ணிலிருந்து விண்ணைக் காணும் யோகம். நல் அன்பு காட்டும் நேயம் இதுவே இசைக்கவி ரமணனின் அடையாளங்கள். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என பல்முகம் கொண்டவர். தமிழ் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள், வாழ்வியல் கருத்துக்கள், உலக அளவில் மணம் பரப்பி வருகின்றன. இவரது, காலங்களில் அவன் வசந்தம் என்ற கவிஞர் கண்ணதாசன் பற்றிய நினைவுகளை பகிரும் நிகழ்ச்சி மிகப் பிரபலம். மேலும், எஸ்.பி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதி யார்? என்ற நாடகத்தில் பாரதியாராக உலக அளவில் வலம் வந்தவர். கண்டேன் கடவுளை என்ற இந்த தொடரில்…தன் ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். கண்டேன் கடவுளை... விஐபி-க்களின் தெய்வீக அனுபவங்களை பகிரும் புதிய தொடர். வாரம் ஒரு விஐபி தங்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள். வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும். காணத் தவறாதீர்கள்