உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அறிந்த கோயில்கள் அறியாத தகவல்கள் - குன்றக்குடி முருகன் கோயில் | Murugatemple | Kundrakuditemple |

அறிந்த கோயில்கள் அறியாத தகவல்கள் - குன்றக்குடி முருகன் கோயில் | Murugatemple | Kundrakuditemple |

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் சண்முகநாதர் கோயில் அமைந்துள்ளது. கண்ணபிரான், நான்முகன், இந்திரன், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் ஆகியோர் வழிபட்ட தலம் இது. மூலவர் சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாறுடையான் என பல பெயர்கள் மூலவருக்கு உண்டு. இந்த மலை மயில் வடிவத்தில் இருப்பது சிறப்பு. ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் மலை அமைந்துள்ளது. கீழ் கோயிலில் எழுந்தளியிருப்பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியர் வழிபாடு செய்துள்ளார். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்றுநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். இந்த கோயில் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர்.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை