கார்த்திகையில் கொண்டாடும் மஹாதேவ அஷ்டமி | Mahadev ashtami | Coimbatore
கேரளாவின் வைக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாதேவா சிவன் கோயில் பிரசித்தி பெற்றது. அதிலும் புராதான காலத்தில் இருந்து மஹாதேவ அஷ்டமியாக அனுசரிக்கப்படும் கார்த்திகையில் வரும் தேய்பிறை அஷ்டமி விழா மிக பிரபலம். காரணம் மஹாதேவ அஷ்டமி தினத்தில் சிவபெருமான் இங்கு பிரசாதம் சாப்பிட்டதாக நம்பப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேய்பிறை அஷ்டமி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டு பிரசாதம் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. சிவபெருமானுக்கு உகந்த உற்சவங்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் மஹாதேவ அஷ்டமி விழாவை இந்த ஆண்டு தமிழகத்தில் அதுவும் கோவையில் நடத்துகிறது பிராமண் சேவக் பவுண்டேஷன்..
நவ 15, 2024