நல்ல பிள்ளைகள் வேண்டுமா? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நல்ல பிள்ளைகள் வேண்டுமா? தவமிருந்து பெற்றோர், பிள்ளைகளைப் பெறுகின்றனர். ஒரு பிள்ளை கிடைப்பது என்பது தெய்வச் செயல். இன்று, குழந்தை பிறக்க வழியின்றி, மகப்பேறு மையங்களை நாடுவோர் அதிகரித்து வருகின்றனர். சிலர் கோவில் கோவிலாகச் சுற்றுகின்றனர். ஒரு வழியாய் பிள்ளைகளைப் பெற்ற பிறகு, அவர்கள் நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர வேண்டும் என்ற கவலை எழுகிறது. பிள்ளைகளைப் பெறுவது, ஒரு வகை யோகம் என்றால், அவர்கள் நல்லவர்களாக வளர இன்னும் அதிர்ஷ்டம் வேண்டும். அவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும், பெரியவர்களை மதிக்க வேண்டும், உயர்நிலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பாத பெற்றோரே இல்லை. இத்தகைய நல்ல குழந்தைகளைப் பெற, தறி கெட்டு திரியும் பிள்ளைகள் நல்வழிக்கு திரும்ப, மகாளய பட்ச துவிதியை திதியான இன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் படத்திற்கு மாலை அணிந்து, படையலிட்டு வழிபட இது சாத்தியமாகும்.