உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கோயில்களில் களைகட்டும் மகா சிவராத்திரி திருவிழா | Maha Shivratri | Shivratri festival | Salem

கோயில்களில் களைகட்டும் மகா சிவராத்திரி திருவிழா | Maha Shivratri | Shivratri festival | Salem

உலகம் முழுதும் மகா சிவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. சேலம் பொன்னம்மாப்பேட்டையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கோடிக்கணக்கான நெல் மணிகளைக் கொண்டு சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அனைத்து மக்களும் உணவிற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வகையில் லிங்கம் வடிவமைக்கப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் கூறினர். பக்தர்கள் மனமுருகி வழிபட்டு சென்றனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி