உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தெப்பம் வலம் வந்து மைய மண்டபம் எழுந்தருளிய சுவாமி - அம்மன் | meenakshi amman temple

தெப்பம் வலம் வந்து மைய மண்டபம் எழுந்தருளிய சுவாமி - அம்மன் | meenakshi amman temple

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று மதியம் சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூதச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ