உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பதவி யோகம் கிடைக்க வழிபட வேண்டிய முருகன்| Murugan temple| Kandha sashti viradham

பதவி யோகம் கிடைக்க வழிபட வேண்டிய முருகன்| Murugan temple| Kandha sashti viradham

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார்குப்பம் உள்ளது. இங்கு 1000 ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இடுப்பில் கை வைத்து கம்பீரமான தோற்றத்துடன் முருகன் காட்சியளிக்கிறார். பொதுவாக முருகனின் வாகனம் மயில். ஆனால் இந்த கோயிலில் முருகனுக்கு சிங்கம் வாகனமாக உள்ளது. அதிகாரத்தை குறிக்கும் சிங்கத்தின் மீது ஏறி மயில் நிற்பது மற்றொரு சிறப்பு. முருகனின் இருபுறமும் யானை உள்ளது. இங்குள்ள முருகன் கையில் வேல், வஜ்ரம் உள்ளிட்ட ஆயுதங்கள் இல்லாமல் கருணை வடிவாக எழுந்தருளுகிறார்.

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ