பல்லவர் கால குடைவரை கோயிலில் குழந்தை பாக்கியம் தரும் நரசிம்மர் Perumal
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் பாடலாத்ரி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. பாடலம் என்றால் சிவப்பு. அத்ரி என்றால் நரசிம்மர். கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இந்த மலையில் தரிசனம் தந்ததால் பாடலாத்ரி என இந்த ஊருக்கு பெயர் வந்தது. இது பல்லவர் கால குடைவரை கோயில். தாயார் ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர் , லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதார காட்சிகள் கதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 12 ஆழ்வார்களும் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்
ஜன 01, 2024