உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஆந்திர மாநிலம் அகோபிலம் நவ நரசிம்மர் கோயில் போல் அமைகிறது | Nava Narasimha Temple

ஆந்திர மாநிலம் அகோபிலம் நவ நரசிம்மர் கோயில் போல் அமைகிறது | Nava Narasimha Temple

ஆந்திர மாநிலம் அகோபிலம் நவ நரசிம்மர் கோயில் போல் அமைகிறது | Nava Narasimha Temple | Raja Gophuram Boomi Puja | Pudhucherry ஆந்திர மாநிலம் அகோபிலம் நவ நரசிம்மர் கோயில் போல் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் நவ நரசிம்மர் கோயில் அமைகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம், ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் பாரம்பரிய ஆகம விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க, ராஜகோபுரம் கட்டுமான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஓய்வு நீதிபதி ராமபத்திர தாத்தாச்சாரியார், பட்டாச்சாரியார் சம்பத்குமார், வேத ஆகம சம்ரக்சண லஷ்மி சரஸ் மாருதி டிரஸ்ட் (samrakshana lakshmi saras maruthi trust) நிர்வாகிகள் செய்திருந்தினர்.

நவ 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ