ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம் இன்று ஆவணி அவிட்டம். அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டு பானையெல்லாம் தங்கம் என்ற சுலவடை உண்டு. ரிக்,யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உண்டு. வேதம் கற்ற பிராமணர்கள் இவற்றில் ஏதாவது ஒரு வேதத்தைப் பின்பற்றுவர். தமிழகத்தில் யஜுர் வேதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம். இவர்கள் ஆவணி மாத அவிட்ட நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளில், உபாகர்மா தொடங்குவர். உபாகர்மா என்றாலே ஆரம்பம் என்று தான் பொருள். வேதம் கற்க துவங்கும் நாள் என்று இதை எடுத்துக் கொள்ளலாம். இந்நாளில், தாங்கள் அணிந்துள்ள பூணுõலை மாற்றுவர். தந்தை இல்லாதவர்கள், வேதம் கற்றுத்தந்த ரிஷிகளுக்கும், தங்கள் முன்னோருக்கும் தர்ப்பணம் செய்து, நன்றிக்கடன் செலுத்துவர். ஒரு பூõணுல், பல கோடி டன் எடையுள்ள தங்கத்தையும் விட உயர்ந்ததாகும். இதனால், தான் அவிட்டத்தில் பிறந்தால், தவிட்டுப்பானையெல்லாம் தங்கம் என்ற சுலவடையே பிறந்ததாகச் சொல்வர்