ஏழுமலையானுக்கு நிகராக செய்யப்படும் பூஜைகள் | perumaltemple
ஏழுமலையானுக்கு நிகராக செய்யப்படும் பூஜைகள் | perumaltemple தென் திருப்பதி என அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூரில் அமைந்துள்ளது. தொண்டைமான் மன்னர் ஒருவர் , நாட்டுக்கு பாதுகாப்பு வேண்டி வெங்கடாசலபதியை வேண்டினார். தன் வெற்றிக்கு காரணமாக இருந்த பெருமாளுக்கு நன்றி சொன்னார் மன்னர். அப்போது திருமலைவையாவூரில் உள்ள மலையில், செங்கோலுடன் மன்னனுக்கு காட்சி அளித்தார் பெருமாள். மனதுக்குள் தோன்றி இறைவன் அருள் புரிந்ததால் இவர் பிரசன்ன வெங்கடேசர் என அழைக்கப்படுகிறார். அதன் பிறகே கோயில் கட்டப்பட்டது