உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஆச்சரியம் தரும் திவ்ய தேச கோயில்கள் | ஒரே இடத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் | Perumal temple

ஆச்சரியம் தரும் திவ்ய தேச கோயில்கள் | ஒரே இடத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் | Perumal temple

பெருமாளின் தரிசனம் பெற்றவர்கள், அவரை கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பி வழிபாடு செய்தனர். இறைவன் நாராயணன் மீது அளவற்ற பக்தியால் அவரின் திருவடியை அடைந்த ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் பாடிய திவ்யபிரபந்தம் எனும் பதிகங்களில் பாடியுள்ள திருத்தலங்களே திவ்ய தேசங்கள் ஆகும். சோழநாட்டில் 40, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, மலைநாட்டில் 13, பாண்டியநாட்டில் 18, வடநாட்டில் 11 என மொத்தம் 106 திவ்யதேசங்கள் உள்ளன. பாற்கடல் மற்றும் பரமபதம் ஆகியவை சேர்த்து மொத்தம் 108 திவ்யதேசங்கள். ஒவ்வொரு திவ்யதேசங்களுக்கும் சென்று வழிபாடு செய்ய பல நாள் அவகாசம் தேவைப்படும். அருள் இருந்தும் பொருள் குறை உள்ளவர்கள் கோயில்களுக்கு செல்வதில் சிரமம் இருக்கலாம். இந்த குறையை தீர்க்க, செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் செல்லும் நெடுஞ்சாலையில் திருவடிசூலம் என்ற இடத்தில் 108 திவ்யதேசங்களும் ஒரே கோயிலாக அமைந்துள்ளது. Temple Location : https://maps.app.goo.gl/gGavnedrAF2Wdq546 Contact:9884222448

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ