பொன் விளைந்த களத்தூரில் சயன கோலத்தில் காட்சி தரும் ராமர் | Ramar Temple
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூரில் 1000 ஆண்டு பழமையான கோதண்ட ராமசுவாமி கோயில் உள்ளது. மூலவர் பட்டாபி ராமர், உற்சவர் கோதண்ட ராமர், தாயார் சீதா. பல்லவர், சோழர் காலத்தில் இந்த ஊர் களந்தை என அழைக்கப்பட்டது. தேசிகன் வருகைக்கு பின் பொன்விளைந்த களத்தூர் என மாறியது. கோயில் வடக்கு நோக்கி உள்ளது. மூலவர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். ராமரின் உற்சவ விக்ரஹம், 60 ஆண்டுகளுக்கு முன், கோயில் எதிரே உள்ள கிணற்றில் கிடைத்தது. கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் உள்ளது. பெரும் பகுதி கல்லால் கட்டப்பட்டது
ஜன 21, 2024