உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சென்னை அருகே ராமாயண காலத்து கோயில் - புதுப்பட்டு ஆபத்சயாயேஸ்வரர் | Ramayana | Shivatemple |

சென்னை அருகே ராமாயண காலத்து கோயில் - புதுப்பட்டு ஆபத்சயாயேஸ்வரர் | Ramayana | Shivatemple |

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு ஊராட்சியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ராமபிரான் ஈசனை அபிஷேகம் செய்து வழிபட்ட கோயில்கள் இரண்டு உள்ளது. அதில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில். இன்னொன்று ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இந்த கோயில் அருகே வில்லேந்திக்குப்பம் என்ற இடத்தில் விபண்டக மகரிஷி என்ற முனிவர் தவம் செய்து வந்தார். ராமன் வனவாச காலத்தில், ராவணன் சம்ஹாரத்துக்கு முன் முனிவரை சந்திக்க சென்றார். ராமனின் கோரிக்கை நிறைவேற இந்த கோயில் சிவனை பூஜை செய்ய வேண்டினார். முனிவர் கங்கை நீரை வழங்க, அதை வைத்து ஈசனை நீராட்டி வழிபட்டார் ராமர். அதற்கான புடைப்பு சிற்பம் இந்த கோயிலில் இருப்பது விசேஷமாகும். ராமன் வருகையால் தான் இந்த இடம் வில்லேந்திக்குப்பம் என்ற பெயரையும் பெற்றது. நாளடைவில் பில்லேந்திக்குப்பம் என மாறிவிட்டது. ராமாயணத்துக்கும் இந்த கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளன. வேடர்களின் தலைவனான குகனுடன் நட்பு ஏற்பட்ட போது, “தசரத புத்திரர்களாகிய நாங்கள் குகனோடு ஐவரானோம்” எனக்கூறி குகனை சகோதரன் நிலைக்கு உயர்த்தி மகிழ்ந்தவர் ராமர். இந்த பகுதி வேட்டுவர்கள் வாழ்ந்து வந்த இடம் என அறியப்படுவதால், வேடந்தாங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு முன் நெசவுத்தொழில் சிறப்பாக இருந்தது. எனவே நாளடைவில் புதுப்பட்டு என ஊரில் பெயர் மருவி உள்ளது. இந்த கோயிலின் காலம் இன்னும் சரியாக கணிக்கப்படவில்லை. கோயில் கட்டமைப்பை வைத்து பார்க்கும் போது இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கோயிலில் நுழையும் போதே தாயார் ஆனந்தவல்லியை வணங்கிவிட்டு சிவனை வழிபட வேண்டும். இது பல்லவர் கால கட்டட கலை தான் என்பதை உறுதிபடுத்துகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயில், புதுப்பட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோயில், கிணார் நேத்ராலேயேஸ்வரர் கோயில் என இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி