படிப்பில் நம்பர் ஒன் ஆவது உறுதி - கைவிடாத பரசுராமேஸ்வரர் | Shivatemple | Templevlog | Unexploredchen
பறவைகளின் கீதம், பூச்சிகளின் சத்தம், காற்றின் சலனம் என இயற்கை சத்தங்களுடன் ஒரு ஆன்மிக அனுபவத்தை பெற வேண்டும் என்றால் நிச்சயமாக இந்த கோயிலை மிஸ் பண்ணிடாதீங்க. நான்கு பக்கமும் வயல்வெளிகளால் சூழப்பட்ட பரசுராமேஸ்வரர் கோயில் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து ஒதுங்கி அமைதியான சூழலில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ரொம்ப தூரம் இல்லை. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள முள்ளிப்பாக்கம் கிராமத்தில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது. மூலவர் பரசுராமேஸ்வரர், தாயார் ஞானாம்பிகை. கிபி 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பரசுராமர் இங்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே தான் ஈசன் பரசுராமேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயில் நுழைவில் முருகன் மற்றும் விநாயகர் உள்ளனர். நந்தி மற்றும் பலிபீடம் கருவறையை நோக்கி அமைந்துள்ளன. அர்த்த மண்டபம், மகா மண்டபம் அதனுடன் அமைந்துள்ளது. நர்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கருவறை சுவர்களை சுற்றி அமைந்துள்ள கோஷ்ட சிலைகள் ஆகும். சண்டிகேஸ்வர் சன்னதியையும் கோயிலில் காணலாம். கோயில் வளாகத்தில் சூரியன், பைரவர் மற்றும் நவகிரங்களுக்கு சன்னதிகள் உள்ளன. இங்கு வில்வ மரம் தான் ஸ்தல விருட்சம். திருமண தடைகள் நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் சிவபெருமானை வழிபடுகின்றனர். சுவாமிக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலிட்டு வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும் என்பது நம்பிக்கை.