உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ஒரே விமானத்தின் கீழ் மூன்று கருவறை - இங்கு மட்டுமே பார்க்க முடியும் | Shivatemple | Mahabaratham

ஒரே விமானத்தின் கீழ் மூன்று கருவறை - இங்கு மட்டுமே பார்க்க முடியும் | Shivatemple | Mahabaratham

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிவனை வழிபட்டனர். அவற்றுள் ஒன்று தான் ஓசூரில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் பாண்டவர்கள் ஐந்து சிவலிங்கங்களை நிறுவி வழிப்பட்டனர். அவற்றுள் மூன்று லிங்கங்கள் மட்டுமே இப்போது பாதுகாப்பாக உள்ளது. நகுலன், சகாதேவன் வழிபட்ட லிங்கங்கள், கோயில் அருகே உள்ள மண்மேட்டின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோயில் முன்னாள் கொடிமரம், கோயிலில் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. விநாயகர், முருகன், அம்பாள் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இந்த கோயிலில் ஒரே விமானத்தின் கீழ் மூன்று கருவறைகள் இருப்பது கூடுதல் சிறப்பு. வலதுபுறம் பீமேசர், நடுவில் சோமேசர், இடதுபுறம் அர்ச்சுனேசுவரர் உள்ளனர். கொடி மரம் அருகே நின்று பார்த்தாலே கிழக்கு நோக்கிய மும்மூத்திகளையும் மெய் மறந்து தரிசிக்கலாம்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ