எந்த கோயிலிலும் பார்க்க முடியாத 11 விநாயகர் சபை - ஆச்சரியம் தரும் வரலாறு | Shivatemple | Vinayagar |
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் தங்காதலி வாசீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.தேவார பாடல்பெற்ற தொண்டை நாட்டு தலங்களுள் இது 16வது தலம். சிவனின் உத்தரவை மீறி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சென்றாள் பார்வதி. இதனால், பூமியில் பெண்ணாக பிறக்கும்படி சிவன் சபித்தார். அப்போதும் சிவனை நினைத்து பார்வதி தவம் இருந்தார். ஈசன் மனம் அப்போது தான் இளகியது. பார்வதியை மீண்டும் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்த இடம் தான் திருப்பாச்சூர். இங்கு வந்த சிவன் “காதலியே.. நான் வந்து விட்டேன்” என்றார். இதனால் தான் இந்த கோயிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். அதாவது தன் காதலி என சிவன் கூறுவதாக அர்த்தம். மூர்த்தி,தலம், தீர்த்தம், விருட்சம், தவம் என ஐம்பெரும் சிறப்பு அம்சங்களோடு, வரலாற்று சிறப்புகளை கொண்டது இந்த ஊர். திரிபுராந்தர்களை அழிக்க சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அப்போது தன்னை வணங்காமல் சென்றது ஏன் என விநாயகர் ஒரு விசாரணையை போட்டார். அதன் அடிப்படையில் இந்த கோயிலில் 11 விநாயகர்கள் இருக்கும் விநாயகர் சபை அமைக்கப்பட்டது. திருப்பதி வெங்கடாஜலபதி தன் திருமணத்துக்காக வாங்கிய கடனை அடைக்க, விநாயகர் சபையிடம் வந்த பிறகு தான் வழிபிறந்தது எனவும் சொல்லப்படுகிறது. குபேரனிடம் வாங்கிய அந்த கடனை, எவ்வளவு முயற்சி செய்தும் அடைக்க முடியாது போது, சிவபெருமானிடம் சென்றார் வெங்கடாஜலபதி. அப்போது ஈசன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்தினார். 16 என்பது பதினாறு வகை செல்வங்களை குறிக்கும். ”மச்ச அவதாரத்தின் போது 11 செல்வங்களை இழந்துட்டீங்க. 5 செல்வங்களே உங்களிடம் உள்ளன. எனவே விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் மாலை, 11 வாழைப்பழம் வைத்து, 11 நெய் தீபம் ஏற்றி வேண்டினால் மூன்று மாதங்களில் இழந்த செல்வங்களை மீண்டும் பெற முடியும்” என பெருமாளுக்கு ஈசன் அறிவுறுத்தினார். அதே போல் பக்தர்களும் வழிபட்டால் இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோயிலில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது.அதனுள் சிவன் சுயம்புவாக உருவானார். இந்த கோயில் சிவன், வாசி என்ற கோடாரியை எடுத்த போது அவர் மீது பட்டு ரத்தம் வந்துவிட்டது. இதனால் சிவனை தொடாமலே இங்கு பூஜை செய்கின்றனர். இந்த கோயிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இந்த கோயிலில் பைரவர் தெற்கு பார்த்து இருப்பார். இது ஒரு கேது தலம் என்பது முக்கியமாக கவனிக்கவேண்டியது.