/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ கெட்ட நேரத்தை சரி செய்யும் செவிலிமேடு சிவன் கோயில் | Shivatemple | Raguketu | Sevilimedu
கெட்ட நேரத்தை சரி செய்யும் செவிலிமேடு சிவன் கோயில் | Shivatemple | Raguketu | Sevilimedu
காஞ்சிபுரம் அருகே உள்ள செவிலிமேட்டில் புகழ்பெற்ற 4 சிவன் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கிராமத்தின் நடுவில் உள்ள கைலாசநாதர் கோயில். இந்த ஊர் முதலில் சிவலிங்க மேடு என அழைக்கப்பட்டது. நாளடைவில் செவிலிமேடு என்றானது. சுமார் 1000 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோயில், ஒற்றை நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கருவறைக்கு முன்பு பலிபீடமும் ரிஷபமும் உள்ளன. புராணங்கள் படி, பாற்கடலை கடைந்த போது, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்கள் சாப்பிடும் படி செய்தார்.
ஜூலை 25, 2025