உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சித்தர்கள் வழிபட்ட சிவன் கோவிலின் அமானுஷ்யம்! siddhar worshipped sivan temple

சித்தர்கள் வழிபட்ட சிவன் கோவிலின் அமானுஷ்யம்! siddhar worshipped sivan temple

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் உள்ளது நூரொந்துசாமி மலை கிராமம். இங்குள்ள குகை கோயில்களில் யோகிகளும் முனிவர்களும் சிவனை வேண்டி தவமிருந்துள்ளனர். சித்த லிங்கேஸ்வரர் சுவாமிகள், நில மாதேஸ்வர சுவாமிகள் என இங்கு தவமிருந்து ஈசன் அருள் பெற்றவர்கள் அதிகம். 19ஆம் நூற்றாண்டின் முன் பகுதியில் சிவயோகீஸ்வரர் என்ற மஹான் இங்கு 101 வருடங்கள் தவம் செய்தார். சிவதொண்டு செய்த அவர் , அந்த கிராம மக்களுக்கு தினமும் உணவு வழங்குவது வழக்கம். ஒரு உருண்டை களியை எடுத்து அதை நூறு பேருக்கு கொடுத்து பின்னர் நூற்றியோராவது நபராக தானும் உண்ணுவாராம். நூற்றியொன்று என்பதை குறிக்கும் வகையில் மக்கள் அவரை நூரொந்து சுவாமிகள் என்று அழைத்தனர். பின்னர் அதுவே அந்த மலையின் பெயராக மருவி உள்ளது. இங்கு இருக்கும் இறைவனும் நூரொந்தீஸ்வரர் என பெயர் பெற்றார்.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி