கருட வாகனத்தில் காட்சியளித்த பிரசன்ன வெங்கடாஜலபதி
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்டோர் முறைப்படி 48 நாட்கள் விரதம் இருந்து இங்கு வந்து தங்கினால் வினைகள் யாவையும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் திருப்பதிக்கு சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனைகள் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இத்தலம் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தகோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடத்த 04-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.அதன்படி இன்று கருட வாகனத்தில் எழுந்தருளி பிரச்சனை வெங்கடாஜலபதி காட்சி அளித்தார்.கருட வாகனத்தில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதியை காண திரளான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 12 ம் தேதி நடைபெறுகிறது.