உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் உறையூர் வெக்காளியம்மன்

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் உறையூர் வெக்காளியம்மன்

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்திபெற்றது. வானமே மேற்கூரையாகக்கொண்ட வெக்காளிஅம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைதந்து வழிபாடு நடத்துவது வழக்கம். கல்வி, செல்வம், மற்றும் வலிமை இந்த மூன்றினையும் வழங்கி பக்தர்களுக்கு அருள்மழை பெய்துவருபவள் வெக்காளியம்மன். இத்திருக்கோவிலில் நவராத்திரி விழாவானது கடந்த 2ம்தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது, தினசரி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதிஉலா நடைபெறுகிறது, இதனிடையே நவராத்திரி திருவிழாவின் 6ம்நாளான இன்று வெக்காளியம்மன்(உற்சவர்) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி மகாதீபாராதனைக்குப்பின்னர் உள்பிரகாரத்தில் 3முறை உலாவந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம்செய்து சென்றனர்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை