நான்கு தாயார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சீனிவாசப் பெருமாள்
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவம் டைட்டில்: நான்கு தாயார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சீனிவாசப் பெருமாள் | Madurai | Aani Brahmotsavam | Srinivasa Perumal Temple மதுரை முனிச்சாலையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சௌராஷ்டிரா பிராமண தர்ம பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் இரண்டாம் ஆண்டு ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சீனிவாசப் பெருமாள் சுவாமி, தங்க சூரிய பிரபை, வெள்ளி சந்திர பிரபை , சேஷ வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம், கருட சேவை, அனுமார் வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஏழாம் நாள் விழாவான இன்று கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபப் பகுதியில் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு மத்தியில் திருக்கல்யாண வைபத்தின் மாலை மாற்றுதல் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வசந்த மண்டபத்தின் முன்பு ஹோம பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள், மேலதாளங்கள் முழங்க சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் பங்கேற்று பெருமாள் சுவாமியை மனம் உருக வேண்டினர். தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண வைபவத்தின் ஒரு பகுதியாக மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது இவ்விழா வரும் 12ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.