வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீநிவாசப் பெருமாள்
வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீநிவாசப் பெருமாள் | Srinivasaperumal Temple | Aani Brahmotsavam | Munichalai | Madurai மதுரை முனிச்சாலை பகுதியில் சவுராஷ்ட்ரா பிராமண தர்ம பரிபாலன சபைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் சுவாமி புறப்பாடாகி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ நிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் கடந்த 9ம் தேதி வெகு விமர்சையாக நடந்தது. கடந்த 11ம் தேதி அதிகாலை 26 அடி உயர புதிய அலங்காரத்தேரில் சுவாமி எழுதருள தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5 மணிக்கு புஷ்ப யாகம், இரவு 7 மணிக்கு வெட்டிவேர் சப்பரம் திருவீதி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. இரவு 9 மணிக்கு கொடி இறக்கம் செய்து ஸ்ரீநிவாசப் பெருமாள், அம்பாளுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீநிவாசப் பெருமாள் தேவஸ்தானம் நிர்வாகிகள், பக்தர்கள் செய்தனர்.