ஸ்ரீரங்கம் பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவம் | Srirangam
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் திருநாள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் அஜந்தா சவுரிக்கொண்டை உள்ளிட்ட சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
ஜன 02, 2025