அர்ஜூனனுக்கு இந்த இடத்தில் தான் அஸ்திரம் கிடைத்தது
காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூரில் அஸ்திரபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பாலாற்றின் கரையில் உள்ள இந்த ஊர் ஆனியூர், ஆதியூர் என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனூரில் வேத பாடசாலை இருந்துள்ளது. பல்லவ மன்னன் கம்ப வர்மன்,பராதங்க சோழன் , ராஜராஜ சோழன் , குலோத்துங்க சோழன், உள்ளிட்டோர் அஸ்திரபுரீஸ்வரரை போற்றி வந்துள்ளனர்
ஜன 06, 2024