உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / மேலமுருக்கூர் ஸ்ரீ ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

மேலமுருக்கூர் ஸ்ரீ ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமம் மேலமுருக்கூரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீஆதி விநாயகர், ஸ்ரீ பாப்பா உங்களுக்கு மாரியம்மன் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமீபத்தில் ஆண்டவர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பணிக்காக கடந்த 12ம் தேதி காவிரியில் நதியிலிருந்து புனித நீர் எடுத்துட்டு வந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதலாம் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 13ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், யந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்வுகள் நடைபெற்றது . இதனை தொடர்ந்து மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பின்னர் மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று தொடர்ந்து ஸ்ரீஆதி விநாயகர், ஸ்ரீபாப்பாங்குளத்து மாரியம்மன், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவரின் மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீ பாப்பாங்குளத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை