/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு | Tamil Newyear| Special pooja in Temples
கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு | Tamil Newyear| Special pooja in Temples
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினத்தை மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேளதாளம் முழங்க கிரிவல பாதையை சுற்றி வந்து முருகனை வழிபட்டனர்.
ஏப் 14, 2025