உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தஞ்சை பெரிய கோயில் பந்தக்கால் நடும் விழா | Thanjai Periya Kovil

தஞ்சை பெரிய கோயில் பந்தக்கால் நடும் விழா | Thanjai Periya Kovil

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. இதை முன்னிட்டு இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் விழா நடந்தது. பந்தக்காலுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர் மகா தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் சிவசிவ கோஷம் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி கொடியேற்றத்தை தொடர்ந்து 18 நாள் திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 27ம் தேதி நடக்கும். திரளான பக்தர்கள் பந்தக்கால் நடும் வைபவத்தில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தனர்.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !